கிருஷ்ணகிரி

கோதண்டராமர் சிலை கொண்டு செல்லும் பணி மீண்டும் தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை, பெங்களூருக்கு கொண்டு செல்லும் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள கோரக்கோட்டை மலையிலிருந்து 64 அடி நீளம், 26 அடி அகலம், 350 டன் எடை கொண்ட ஒரே கல்லிலான சிலையானது 246 சக்கரங்கள் கொண்ட ஒரு கனரக வாகனத்தின் மூலம், கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. கடந்த 3 மாதங்களுக்கு முன் கிருஷ்ணகிரியைக் கடந்து சென்ற இந்த சிலை,  சூளகிரி அருகே நிறுத்தப்பட்டது. சாமல்பள்ளம் அருகே உள்ள பாலத்தைக் கடந்து செல்ல நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி மறுத்த நிலையில்,  அந்த சிலை அங்கேயே நிறுத்தப்பட்டது.
பிப். 8-ஆம் தேதி நிறுத்தப்பட்ட இந்த சிலையை, பெங்களூரு கொண்டு செல்லும் பணியில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து,  தற்போது பாலத்தின் அருகே தற்காலிகமாக ஒரு தரைப் பாலம் அமைத்து சிலையை பெங்களூருக்கு கொண்டு செல்லும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT