கிருஷ்ணகிரி

காவலர் மீது தாக்குதல்: கப்பல்படை வீரர் உள்பட  2 பேர் கைது

DIN

பணியின்போது காவலரைத்  தாக்கியதாக கப்பல் படை வீரர் உள்பட இருவரை  போலீஸார் கைது செய்தனர். 
கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் திருப்பதி (35), திங்கள்கிழமை  இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜக்கப்பன் நகரில் சந்தேகப்படும் வகையில் இருவர், மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் சுத்தியல் போன்ற  ஆயுதங்களை வைத்திருந்ததால்,  காவலர் திருப்பதி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். 
இதனால், ஆத்திரமடைந்த இருவரும்,  திருப்பதியை தாக்கினராம். இதில் காயம் அடைந்த திருப்பதி,  கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.  விசாரணையில் அவர்கள் ஜக்கப்பன் நகர்,  8 - ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த அரவிந்த் குமார் (27), திருமலை நகரைச் சேர்ந்த அன்பழகன்(27) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அரவிந்த் குமார்,  கேரள மாநிலத்தில் கப்பல் படை வீரராக பணியாற்றி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT