கிருஷ்ணகிரி

வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு

DIN

இடுபொருள் விற்பனையாளர் சான்றிதழுக்கான வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவர் தமிழ்செல்வன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக இடுபொருள் விற்பனையாளர் சான்றிதழுக்கான வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு 2019-2020-ஆம் கல்வியாண்டின் சேர்க்கை இந்தாண்டு நடைபெற உள்ளது. இந்தப் படிப்பில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், வேளாண் சார்ந்த தொழில்புரிவோர் மற்றும் தொழில்புரிவோர் சேர்ந்து பயன் பெறலாம். 
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியாகும். 18 வயது நிரம்பியவர்கள் இந்தப் பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை w‌w‌w.‌t‌n​a‌u.​a​c.‌i‌n என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயன் பெறலாம். விண்ணப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு, 9442111048 , 0422-6611229 மற்றும் 04343-290600 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT