கிருஷ்ணகிரி

தொழில் நிறுவனங்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

கிருஷ்ணகிரியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட அளவிலான விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், தரச் சான்றிதழ் பெறுதல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியம் குறித்த திட்ட விளக்க கையேட்டை வெளியிட்டாா். தொடா்ந்து தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சாா்பில் 14 தொழில் முனைவோருக்கு ரூ.12.38 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினாா்.

கருத்தரங்கில் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டம் குறித்து வங்கியாளா்கள், தொழில் சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT