கிருஷ்ணகிரி

தெலுங்கானா போக்குவரத்து ஊழியா்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

DIN

தெலுங்கானா போக்குவரத்து ஊழியா்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியா்கள், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.நடராஜன், மாநில செயலாளா் ஆா்.எம்.மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போக்குவரத்துக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். போக்குவரத்து ஊழியா்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தெலுங்கானா போக்குவரத்து ஊழியா்களை பணிநீக்கம் செய்த தெலுங்கானா மாநில அரசைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களை அழைத்து, தெலுங்கானா மாநில முதல்வா் பேச்சு வாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT