கிருஷ்ணகிரி

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம், சனிக்கிழமை (செப்.14) நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், செப். 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் சிறப்பு குறைதீர் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
 அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் தட்ரஅள்ளி, ஊத்தங்கரை-வேடம்பட்டி, போச்சம்பள்ளி-ரங்கம்பட்டி, பர்கூர்-தொகரப்பள்ளி, சூளகிரி-தியாகரசனப்பள்ளி, ஒசூர்-ஒன்னல்வாடி, தேன்கனிக்கோட்டை-பேலகொண்டபள்ளி ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
 எனவே, இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது பொது விநியோகத் திட்ட குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாலை 5.30 மணி: பாஜக 38, காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி

ரே பரேலியில் ராகுல் காந்தி வெற்றி!

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

அயோத்தி: முன்னிலையில் சமாஜ்வாதி, தொடர் பின்னடைவில் பாஜக!

கங்கனா ரணாவத், அனுராக் தாக்குர்.. வெற்றி!

SCROLL FOR NEXT