கிருஷ்ணகிரி

புதிய தேடலுடன் ஆய்வகப் பரிசோதனைகளில் மாணவர்கள் ஈடுபட வலியுறுத்தல்

DIN


புதியதேடலுடன் ஆய்வகப் பரிசோதனைகளில் மாணவர்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா அறிவியல் கலைக் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் தாளாளர் சி.பெருமாள் தலைமை வகித்தார். தலைவர் வள்ளி பெருமாள், திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர் கோலின் அருண் பிரகாஷ், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அமலோற்பவம், கலைக் கல்லூரியின் முதல்வர் ஆறுமுகம், வேதியியல் துறைத் தலைவர் ஆனந்தகுமார், பேராசிரியர் மருதுபாண்டியன், நிர்வாக அலுவலர் சுரேஷ்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜன் பேசினார். 
வேதியியல் துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் 15 கல்லூரிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆய்வாளர்களும், பேராசிரியர்களும், தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 
இதில் சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT