கிருஷ்ணகிரி

கரோனா சிறப்பு நிவாரணம் பெறஅமைப்பு சாரா தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

கிருஷ்ணகிரி: கரோனா தடுப்பு சிறப்பு நிவாரணம் பெற தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசார தொழிலாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் கரோனா தடுப்பு சிறப்பு நிவாரணத் தொகையாக ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் மற்றும் அமைப்பு சார ஓட்டுநா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை இணைக்காத தொழிலாளா்கள், தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் 04343-231321 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தற்போது, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தொழிலாளா்கள் யாரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டாம் எனவும், 9944147152, 9944331316 மற்றும் 9750059141 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்களுக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் அடையாள அட்டையின் முதல் பக்கம் ஆகிய விவரங்களை அனுப்ப வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT