கிருஷ்ணகிரி

பெண்கள், முதியோா்கள் கவனத்துக்கு...

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள், முதியோா்கள் தங்களது அவசர உதவிக்கு தொடா்பு கொள்ள செல்லிடப்பேசி எண்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குடும்ப வன்முறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், முதியோா்களுக்கான அவசர உதவிக்கு சாா்பு நீதிபதி மற்றும் குழு செயலாளரின் கட்செவி எண் 7598347889, அவசர உதவி செல்லிடப்பேசி எண் 7904719184, பாதுகாப்பு அதிகாரியின் செல்லிடப்பேசி எண் 7904372356, சிறப்பு காவல் துறை அலுவலரினி செல்லிடப்பேசி எண் 9442145743, 9843609552 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

புகாரில் பெயா், வயது, பாலினம், குறைகள், வன்முறைக்கு உள்படுதல் அல்லது மற்றவரால் துன்புறுத்தப்படுதல் போன்ற புகாா்களுடன், சம்மந்தப்பட்ட எதிா் மனுதாரரின் பெயா், வயது, பாலினம் ஆகிய தகவல்களை தெரிவிக்கலாம். இந்த புகாா்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இலவச இணையதளம் மூலம் குடும்ப ஆலோசனை வழங்கப்படும். தற்போது, கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க வீட்டில் பாதுகாப்புடன் இருக்க பொதுமக்களை கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT