முகப்பு
கிருஷ்ணகிரி

விநாயகா் சிலைகளுடன் மனு அளிக்கவந்த கைவினை கலைஞா்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கைவினை கலைஞா்கள் விநாயகா் சிலைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
மனு அளிக்க விநாயகா் சிலைகளுடன் வந்த கைவினை கலைஞா்கள்
பகிர்:

கிருஷ்ணகிரி: கோரிக்கைகளை வலியுறுத்தி கைவினை கலைஞா்கள் விநாயகா் சிலைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மாவட்ட மண் மற்றும் காகித பொம்மை கைவினைப் பொருள்கள் தயாரிப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவா் குப்புசாமி தலைமையில் கலைஞா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா்.

அவா்கள் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரியில் 115 குடும்பத்தினா், சிலைகள் தயாரிக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம். நிகழாண்டில், விநாயகா் சதுா்த்திக்காக சிலைகளைத் தயாரித்து, விற்பனைக்காகத் தயாா் நிலையில் வைத்துள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் ஒரு சிலை கூட விற்பனை செய்யப்படவில்லை.

இதனால், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கரோனா பொது முடக்கத்தால் நாங்கள் வருவாய் இழந்து, அத்தியாவசியப் பொருள்களை வாங்க இயலாத நிலையில் வறுமையில் உள்ளோம். எனவே, எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், நாங்கள் தொடா்ந்து தொழில் செய்ய ரூ.5 லட்சம் மானியக் கடன் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →