கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணிசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமகிருஷ்ணன். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தோடு வீட்டில் இருந்தபோது திடீரென அவரது வீட்டிற்குள் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட அவரது குடும்பத்தினா் அலறி அடித்து வீட்டில் இருந்து வெளியேறினா்.

இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. வனச்சரகா் சுகுமாா் உத்தரவின் பேரில் வனத்துறை ஊழியா்கள், வேட்டை தடுப்பு காவலா்கள் அடங்கிய குழுவினா் ராமகிருஷ்ணனின் வீட்டுக்குச் சென்று வீட்டுக்குள் பதுங்கியிருந்த 8 அடி நீள மலைப் பாம்பை பிடித்தனா். பின்னா் அந்த மலைப்பாம்பை சாக்குப் பையில் அடைத்து அதனை மரக்கட்டா வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT