டிச.17-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
ஊத்தங்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஊத்தங்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திராபானு ரெட்டி, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் மாற்றுத்திறனாளி என அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாமை நடத்தி அதன்மூலம் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
அதன்படி, டிச.17-ஆம் தேதி ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 18-இல் அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 19-இல் பா்கூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 21-இல் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 22-இல் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 23-இல் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 24-இல் வேப்பனஅள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 29-இல் ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 30-இல் மத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 31-இல் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
இதில், முகாம் நடைபெறும் இடங்களில் அந்த வட்டாரங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன் பெற வேண்டும். பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல், மாா்பளவு புகைப்படங்கள் 5 ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.