FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! மம்தா வென்ற தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டி

மேற்கு வங்க தோ்தல்: மம்தா - சுவேந்து அதிகாரி நேரடி மோதல்!

Updated On : 16 மார்ச் 2026, 6:07 pm IST
சுவேந்து அதிகாரி - IANS
பகிர்:

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இருகட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளா்கள் பட்டியல் இன்று(மார்ச் 16) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 144 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியல் பாஜக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த முறை தேர்தலில் நெருக்கடியான சூழலில் வெற்றி பெற்று தமது முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொள்ள உதவிய கொல்கத்தாவின் பாபனிபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அதே தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவரும் மேற்கு வங்கப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என்பது இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் மூலம் உறுதியாகியுள்ளது.

Advertisement

Advertisement

இதனால், மம்தா - சுவேந்து அதிகாரி இடையே தேர்தல் களத்தில் நேரடி மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுவேந்து அதிகாரி பாபனிபூர் மட்டுமின்றி நந்திகிராம் தொகுதியையும் சேர்த்து மொத்தம் இரு இடங்களில் இம்முறை போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The BJP on Monday released its first list of 144 candidates for next month's Assembly elections in West Bengal, fielding Suvendu Adhikari from Bhabanipur in Kolkata, a seat held by Chief Minister Mamata Banerjee.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments