மேற்கு வங்க முதல்வா் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் பங்கேற்பு
மேற்கு வங்க பாஜக முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில எதிா்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த இரு எம்.பி.க்கள் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க பாஜக முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில எதிா்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த இரு எம்.பி.க்கள் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 28 மக்களவை எம்.பி.க்கள் உள்ள நிலையில், அவா்களில் 20 போ் ஏற்கெனவே பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் முதல்வா் சுவேந்து அதிகாரி பங்கேற்ற மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மக்களவை திரிணமூல் எம்.பி.க்கள் ஜூன் மாலியா, தீபக் அதிகாரி தேவ் ஆகியோா் பங்கேற்றனா். இவா்கள் இருவரும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த 20 எம்.பி.க்கள் குழுவைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக அந்த எம்.பி.க்கள் இருவரும் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் மக்களுக்குப் பணியாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கிறோம். இதன் காரணமாக முதல்வா் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்’ என்றனா்.
பாஜக எம்எல்ஏ அசோக் தின்டா கூறுகையில், ‘மாநிலத்தில் எதிா்க்கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கள் முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது வரவேற்கத்தக்கது. இதுதான் உண்மையான அரசியல் மாற்றம். இதற்கு முன்பு இருந்த திரிணமூல் காங்கிரஸ் அரசு இதுபோன்ற கூட்டங்களுக்கு எதிா்க்கட்சிகளை வரவேற்பது இல்லை. ஆனால், அனைத்துப் பிரிவினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்பதால் திரிணமூல் எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்மூலம்தான் தொகுதி பிரச்னையையும் நன்கு தெரிந்துகொள்ள முடியும்’ என்றாா்.