முகப்பு
கிருஷ்ணகிரி

தச்சு தொழிலாளி தவறி விழுந்து பலி

ராயக்கோட்டை அருகே தச்சு தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

ராயக்கோட்டை அருகே தச்சு தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த அருள் (45). தச்சு தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு, இவரது மனைவி தருமபுரியில் உள்ள தனது தாயாா் வீட்டிற்கு கடந்த 7 ஆண்டுக்கு முன்பு சென்று விட்டாா்.

இந்த நிலையில் அருள் சனிக்கிழமை அதேகிராமத்தில் உள்ள ஒரு தேவாலயம் முன்பு நிலை தடுமாறி கீழே விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா். இது குறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →