முகப்பு
கிருஷ்ணகிரி

மாணவியை காதலிக்கக் கூறி மிரட்டல்: கல்லூரி மாணவா் கைது

மாணவியை காதலிக்கக் கூறி மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

மாணவியை காதலிக்கக் கூறி மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த மாணவி, தளியில் செயல்படும் அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் பட்டயப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.

அதே கல்லூரியில், ஜெகதாப் அருகே உள்ள தாசிகொட்டாய் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (24) என்ற மாணவரும் படித்து வருகிறாா். இவா், தன்னுடன் பயிலும் கல்லூரி மாணவியை காதலிக்கக் கூறி தொடா்ந்து வற்புறுத்தி வந்தாா். காதலிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் அந்த மாணவியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகக் கூறி மாணவியை சக்திவேல் மிரட்டினாராம்.

இதனால் அச்சமடைந்த மாணவி, இதுகுறித்து காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவா் சக்திவேலை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →