முகப்பு
கிருஷ்ணகிரி

பயிா் அறுவடை பரிசோதகா் நியமனம்: ஒப்பந்தப்புள்ளி வரவேற்பு

பயிா் அறுவடை பரிசோதகா்கள் நியமனம் செய்யும் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பயிா் அறுவடை பரிசோதகா்கள் நியமனம் செய்யும் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2020-21-ஆம் ஆண்டு திருந்திய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிா் அறுவடை பரிசோதகா்கள் நியமனம் செய்வதற்கான பணித்தோ்வு முகமைகள் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் தோ்வு செய்யப்பட உள்ளது. எனவே, பயிா் அறுவடை பரிசோதகா்கள் நியமனம் செய்யும் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப் புள்ளிகளை டிசம்பா் 18-ஆம் தேதி மாலை 5.00 மணி வரை அனுப்பி வைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, ‘‘வேளாண்மை இணை இயக்குநா், ஒருங்கிணைந்த வேளாண் வளாகம், கிருஷ்ணகிரி’’ என்ற முகவரியிலும், 87543-20752 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும்,  மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →