முகப்பு
தமிழ்நாடு

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர் தம்பிதுரை! பாமகவுக்கு ஒரு இடம்!

மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 4 மார்ச் 2026, 9:50 pm IST
தம்பிதுரையுடன் எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை இன்று (மார்ச் 4) அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக அறிக்கை

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

Advertisement

Advertisement

இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை (மார்ச் 5) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும், மார்ச் 9 ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.

அதிமுக அறிக்கை

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எஞ்சியுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக தம்பிதுரையை அவர் அறிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள்

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 2 இடங்களில் திமுக போட்டியிடவுள்ளது.

இதன்படி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திருச்சி சிவாவுக்கு மீண்டும் திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு முதல்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

summary

AIADMK candidate for Rajya Sabha Thambidurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.