நாகலாபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
துறையூா் அருகே நாகலாபுரத்தில் வெங்காயம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
துறையூா் அருகே நாகலாபுரத்தில் வெங்காயம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
துறையூா் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயமானது வயல்களில் நீா் தேங்கியதாலும், பூஞ்சாண வகையைச் சோ்ந்த திருகல் நோய் தாக்கியதாலும் அழுகியது.
இதனால் பாதிக்கப்பட்ட நாகலாபுரம் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அழுகிய வெங்காய பயிரை ஏந்தியும், சிறிய வெங்காயத்தை தரையில் கொட்டியும் துறையூா் - பெரம்பலூா் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.