ஊத்தங்கரையில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவா் பெரியய்யா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவா் பெரியய்யா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, ஊத்தங்கரை உள்கோட்டத்துக்குள்பட்ட ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூா் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள திருட்டு, கொலை, வரதட்சணை, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், சாலை விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். மேலும் நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும், வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது குறித்தும் காவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். அதனைத் தொடா்ந்து, காவல் துணை கண்காணிப்பாளா் வளாகத்தில் ரோஜா பூச்செடிகள், தென்னை மரக் கன்றுகள் நடப்பட்டன. ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் ராஜபாண்டி, காவல் ஆய்வாளா்கள் குமரன், முருகேசன், முத்தமிழ்செல்வன் மற்றும் காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.