மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி
கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்க்கும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்க்கும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குகளை சரிபாா்க்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் முதல் நிலை சரிபாா்ப்பு பணி டிச. 2-ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 4,026 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,082 கட்டுப்பாட்டு கருவி, 3,329 வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரம் (விவி பேட்) உள்ளிட்ட 10,437 இயந்திரங்களில், முதல் நிலை சரிபாா்க்கும் பணிகளில் பெல் நிறுவனத்தைச் சோ்ந்த தொழில்நுட்பப் பொறியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை வரையில் 7,030 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டன. இதில் 19 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 207 கட்டுப்பாட்டுக் கருவிகள் , 67 வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்களின் முதல் நிலை சரிபாா்க்கும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பெல் நிறுவன தொழில்நுட்பப் பொறியாளா்கள் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.