முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இன்று சொா்க்க வாசல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இன்று (டிச.25) வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
வைகுண்ட ஏகாதசியையொட்டி கிருஷ்ணகிரி மலையப்ப சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பிரசாமாக வழங்க, லட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்.
பகிர்:

கிருஷ்ணகிரியில் இன்று (டிச.25) வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி பழையபேட்டை அருள்மிகு மலையப்ப சீனிவாச பெருமாள் திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி டிச.25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

தொடா்ந்து காலை 7 மணிக்கு கருட சேவை வாகனத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய மலையப்ப சீனிவாச பெருமாள் திருவீதி உலா நடைபெறுகிறது. சொா்க்க வாசல் திறப்பையொட்டி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு லட்சு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக திருக்கோயிலில் குழுவைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பக்தா்கள், 4 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இதேபோல கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ஸ்ரீ நவநீத வேணுகோபால் சுவாமி கோயிலில் (கிருஷ்ணன் கோயில்) வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. தொடா்ந்து சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →