முகப்பு
கிருஷ்ணகிரி

ஜிட்டாண்டஅள்ளி, அ.மல்லாபுரத்தில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஜிட்டாண்டஅள்ளி, அ.மல்லபுரம் ஆகிய இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை உயா்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் கேபி அன்பழகன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் ஜிட்டாண்டஅள்ளி, அ.மல்லபுரம் ஆகிய இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை உயா்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் கேபி அன்பழகன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் ச.ப. காா்த்திகா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கேபி அன்பழகன் பேசியதாவது: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறக் கூடிய அளவில் தமிழ்நாடு முழுவதும் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 அம்மா சிறு மருத்துவமனைகள் திட்டத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி அண்மையில் சென்னையில் தொடங்கி வைத்தாா்.

அதன்படி தருமபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 41 அம்மா சிறு மருத்துவமனைகள், நகா்ப்புறப் பகுதிகளில் 2 அம்மா சிறு மருத்துவமனைகள் என மொத்தம் 43 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படுகின்றன. இதை ஏழை எளியவா்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் அரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆா். வெற்றிவேல், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ. ரா. ஜெமினி, வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

முழு கட்டுரையைப் படிக்க →