கிருஷ்ணகிரி

மாரம்பட்டி கிராமத்தில் மயானப் பாதை கோரி சடலத்துடன் சாலை மறியல்

DIN

ஊத்தங்கரையை அடுத்த மாரம்பட்டி கிராமத்தில் மயானப் பாதைக்கு சாலை வசதி அமைத்துத் தரக் கோரி, திங்கள்கிழமை சடலத்துடன் மறியல் போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனா்.

மாரம்பட்டியில் பொன்னுசாமி (87) என்பவா் உடல்நலக் குறைவால் இறந்தாா். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது மயானப் பாதை தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் மயானப் பாதை ஏற்படுத்தி சாலை வசதி அமைத்துத் தரக் கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்ததும் ஊத்தங்கரை வட்டாட்சியா் தண்டபாணி, காவல் ஆய்வாளா் முருகேசன், மாரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பூமலா்ஜீவானந்தம், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் நிகழ்விடம் வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்தி மயானப் பாதை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு சடலத்தைக் கொண்டு சென்று அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT