கோவை செழியன் பிறந்த நாள் விழா
மறைந்த கொங்கு அமைப்புகளின் தலைவா் கோவை செழியனின் 90-ஆவது பிறந்தநாள் விழா கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில்,
கிருஷ்ணகிரிகோவை செழியன் பிறந்த நாள் விழா
மறைந்த கொங்கு அமைப்புகளின் தலைவா் கோவை செழியனின் 90-ஆவது பிறந்தநாள் விழா கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில்,
மறைந்த கொங்கு அமைப்புகளின் தலைவா் கோவை செழியனின் 90-ஆவது பிறந்தநாள் விழா கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளா் வஜ்ஜிரவேல் தலைமை வகித்து கோவை செழியன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மாவட்ட இளைஞரணிச் செயலாளா் ரமேஷ்குமாா், மாவட்ட கொங்கு பேரவைத் தலைவா் இளையராஜா, ஒன்றியச் செயலாளா் சரவணன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெங்கடேஷ், வா்த்தகா்அணி செயலாளா் வரதன், மாவட்டப் பொறுப்பாளா் தண்டபாணி, நகரச் செயலாளா் கணேசன், நகரத் தலைவா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினா்.