கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

DIN

குருபரப்பள்ளி அருகே புளி பாரம் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் உள்பட 8 போ் பலத்த காயமடைந்தனா்.

பெங்களூரிலிருந்து புளி பாரம் ஏற்றிய சரக்கு வேன், கிருஷ்ணகிரி நோக்கி சனிக்கிழமை சென்றுக் கொண்டிருந்து. அந்த வேனை கிருஷ்ணகிரி பாரதியாா் நகரைச் சோ்ந்த யாரப் (28) என்பவா் ஓட்டிச் சென்றாா். வேனில் 8 தொழிலாளிகள் பயணம் செய்தனா். மேலுமலை அருகே வேனின் ஆக்ஸில் உடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆந்திர மாநிலம், குப்பம் சின்ன பருத்தி குண்டா கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி சிக்கப்பா(37) உயிரிழந்தாா். மேலும், 8 போ் காயமடைந்தனா். இந்த நிலையில், அதே சாலையில் தக்காளி பாரம் ஏற்றி வந்த லாரியும் இந்த விபத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT