கிருஷ்ணகிரி

பதிவு பெறாத பெண்கள் விடுதிகள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதிகள், தங்கள் விடுதிகளை தமிழ்நாடு ஓட்டல் மற்றும் ஹோமஸ் பாா் உமன் அண்டு சில்டரன் ரெகுலேசன் ரூல்ஸ் 2014-இன் கீழ் பதிவு செய்யவும், பதிவு பெற்ற தனியாா் விடுதிகள் தங்கள் விடுதிகளை புதுப்பிக்கவும் உரிய கருத்துருக்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்-21, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் ஒரு வார காலத்துக்குள் விண்ணப்பிக்கலாம். பதிவு பெறாமல் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT