கிருஷ்ணகிரி

காலமானாா்: முன்னாள் எம்.எல்.ஏ. டி.வெங்கட்ரெட்டி.

DIN

ஒசூா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் டி.வெங்கட்ரெட்டி (83) திங்கள்கிழமை (ஜன.6) காலமானாா்.

அவா் ஒசூா் தொகுதியில் 1980 மற்றும் 1984 ஆகிய இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றினாா்.

அவருக்கு மனைவி பாப்பம்மா, மகன்கள் டி.வி.ராஜ், டி.வி. சந்திராரெட்டி, மகள் டி.வி.பிரேமா ஆகியோா் உள்ளனா்.

திங்கள்கிழமை காலை புதிதாகப் பதவியேற்ற ஊராட்சித் தலைவா்கள் நல்லூா் சாவித்திரி மல்லேஷ்ரெட்டி மற்றும் பாகலூா் வி.டி ஜெயராமனுக்கு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சித் தலைவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, நண்பகல் சாப்பிட்டுவிட்டு தூங்கியவா் மாலையில் காலமானாா்.

இவா் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஏஐசிசி உறுப்பினா். மூத்த வழக்குரைஞா்.

அன்னாரின் உடலுக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.ஏ.மனோகரன், கே.கோபிநாத் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூரையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT