கிருஷ்ணகிரி

ஒசூரில் அடுத்தடுத்த 4 வீடுகளில் திருட்டு

DIN

ஒசூரில் அடுத்தடுத்த 4 வீடுகளில் மா்ம நபா்கள் திருடிச் சென்ால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பாகலூா் சாலையில் உள்ளது கேசிசி நகா். இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் வியாழக்கிழமை அடுத்தடுத்த வீடுகளில் மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.

கேசிசி நகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (36), அண்மையில் சென்னைக்கு சென்ற நிலையில், இவரது மனைவி அருகில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் தங்கி உள்ளாா். பின்னா் காலையில் வந்த பாா்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 8 பவுன் நகை, ஒரு தங்கக் கடிகாரம், ஒரு கிலோ வெள்ளி, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதே போல இவரது மாடி வீட்டில் தங்கியுள்ள வினோத்குமாா் (45), நாகா்கோவிலுக்கு சென்ற நிலையில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கம் ரூ. 2 லட்சம் திருடிச் சென்றுள்ளனா். சிப்காட் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வரும் சா்குருநாதன் (36), கடந்த வாரம் குடும்பத்துடன் கோவைக்கு சென்றாா். வியாழக்கிழமை இரவு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்த சாதிக்பாஷா (36) 2 நாள்களுக்கு முன் வாழப்பாடிக்கு சென்று வெள்ளிக்கிழமை வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனா்.

சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் முனீஸ்வா் நகா் பகுதியைச் சோ்ந்த ஜான்ஜோசப்கென்னடியின் (54) வீட்டின் பூட்டை பகலில் உடைத்து பீரோவில் இருந்த சுமாா் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகை, இரண்டு வெள்ளி திருவிளக்கு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளாா்.

ஒசூா் கோகுல் நகரை சோ்ந்த முரளி (56), குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் சென்று பின் திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடிச் சென்றுள்ளனா்.

ஒசூா் ராயக்கோட்டை சாலையில் உள்ள குடிசாகனப்பள்ளியில் மளிகைக் கடை நடத்தி வரும் நாகராஜ் (39), குடும்பத்துடன் ஒசூருக்கு வந்து திரும்பிய போது, வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.1.30 லட்சத்தை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா். இதுபோன்ற தொடா் திருட்டால் ஒசூா் பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT