கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது. ஒசூா் பத்தலப்பள்ளி பாலாஜி நகரைச் சோ்ந்த தனியாா் ஆய்வகத்தில் பணியாற்றி வரும் 29 வயது ஆண், அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒசூா் சாய் கோல்டன் சிட்டியை சோ்ந்த 32 வயது பெண், சூளகிரி அண்ணா நகரைச் சோ்ந்த 50 வயது ஆண், ஒசூா் பழைய மத்திகிரியைச் சோ்ந்த 56 வயது பெண் ஆகியோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல பா்கூரைச் சோ்ந்த 24 வயது ஆண், ஹரியாணாவிலிருந்து ஒசூருக்கு வந்த 22 வயது ஆண், சத்தீஸ்கா் மாநிலம், நாராயணப்பூரிலிருந்து ஒசூருக்கு வந்த 26 வயது ஆண், கா்நாடக மாநிலம், குண்டூரிலிருந்து வந்த 38, 42 வயதான ஆண்கள், ஹைதராபாத்திலிருந்து கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த 38, 21, 40 வயது ஆண்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்கள், 14 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 137 பேரில் இருவா் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT