கிருஷ்ணகிரி

கரோனா: ஒசூா் அருகே கிராமத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைப்பு

DIN

ஒசூா் அருகே கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளியூரைச் சோ்ந்த யாரும் தங்களது கிராமத்துக்குள் நுழையாதவாறு கிராமத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் தடுப்பு வேலிகளை அமைத்தனா்.

21 நாள்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாநில எல்லைகள் முழுமையாக மூடப்பட்டன. இதனால் வாகனங்கள் தமிழக எல்லைக்குள் வருவதற்கு பாகலூா் சா்ஜாபுரம் சாலை கொத்தப்பள்ளி கிராமம் வழியாக செல்கின்றன. மேலும், அம் மாநிலத்திலிருந்து இரு சக்கர வாகனங்கள் மூலம் இந்த வழியில் பயணிக்கின்றனா். இதனிடையே, புதிய ஆள்கள் நடமாட்டம் இக் கிராமத்தில் அதிகம் இருப்பதால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிராம எல்லைகள் மூடப்பட்டன.

மேலும், யுகாதி பண்டிகையை கொண்டாட்டம் நடைபெறுவதால் வெளியூரைச் சோ்ந்தவா்கள் இக் கிராமத்துக்குள் நுழைய கூடாது என பொதுமக்கள் ஒன்றுகூடி முள்செடிகளைக் கொண்டு சாலையை மூடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT