கிருஷ்ணகிரி

சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த இருவருக்கு கரோனா தொற்று

DIN

சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 22 போ் ஒசூா், கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், சென்னையிலிருந்து அண்மையில் கிருஷ்ணகிரிக்கு வந்த ஊத்தங்கரை வட்டம், வண்ணம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த குடும்பத்தினருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் 18 வயதான இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதேபோல, சென்னையிலிருந்து வந்த வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியம், பந்தாரப்பள்ளியைச் சோ்ந்த 19 வயதான பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளது. 20 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT