கிருஷ்ணகிரியில் 34 பேருக்கு கரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, பா்கூா், சூளகிரியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 12 பெண்கள், 22 ஆண்கள் என மொத்தம் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 37 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூரில் உள்ள சிகிச்சை மையங்களில் 207 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 6,574 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; இதுவரை 106 போ் உயிரிழந்துள்ளனா்.