முகப்பு
இந்தியா

பாராமதி இடைத்தேர்தலில சுநேத்ரா பவாருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாது என்சிபி: சுப்ரியா சுலே

சுநேத்ரா பவாருக்கு ஆதரவாக பாராமதி இடைத்தேர்தலில் என்சிபி முடிவு பற்றி..

Updated On : 16 மார்ச், 2026 at 9:34 AM
சுப்ரியா சுலே
பகிர்:

மகாராஷ்டிரத்தின் பாராமதி தொகுதியில் துணை முதல்வரும் என்சிபி தலைவருமான சுநேத்ரா பவாலுருக்கு எதிராகத் தனது கட்சி வேட்பாளரை நிறுத்தாது என என்சிபி (எஸ்பி)யின் செயல் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்தார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரியா சுலே கூறுகையில்,

துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் மற்றும் பாஜக எம்எல்ஏ சிவாஜி கார்டிலே ஆகியோரின் மறைவால் காலியான, புணேவின் பாராமதி மற்றும் அகிலயநகரின் ரஹுரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 23 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சுநேத்ரா பவார்0, பாராமதி தொகுதியிலிருந்து இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. பாராமதி இடைத்தேர்தலில் என்சிபி(எஸ்பி) போட்டியிடாது என்பதை நான் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன். சுநேத்ராவுக்கு எதிராக நாங்கள் எங்கள் வேட்பாளரை நிறுத்தமாட்டோம்.

ரஹுரி தொகுதியைப் பொறுத்தவரை (எதிர்க்கட்சியான) மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகள் அத்தொகுதி குறித்து ஆலோசனை நடத்தும். அடுத்த ஓரிரு நாள்களில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →