சட்டப்பேரவைக் கட்சி கூட்டத்திற்கு முன்னதாக என்சிபி தலைவர்கள் அஜீத் பவாரின் மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான சுநேத்ரா பவாரை சந்தித்துப் பேசினர்.
என்சிபி செயல் தலைவர் பிரபுல் படேல் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே ஆகியோர் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சுநேத்ரா பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறைந்த கணவர் அஜீத் பவாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மகா கூட்டணி அரசிலி துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும் இருந்த அஜீத் கவார், இந்த வாரத் தொடக்கத்தில் பாராமதியில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் நால்வர் பலியாகினர்.
இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் இன்று பிற்பகல் விதான் பவன் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.