மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்களை காவல் துறை அதிகாரிகள் தரையிறக்கி சிறைப்பிடித்துள்ளனர்.
மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார் சென்ற தனி விமானம் புதன்கிழமை (ஜன. 28) விபத்துக்குள்ளானதில் அவர் உள்பட 5 பேர் பலியாகினர். இதையடுத்து, புணேவில் உள்ள பாரமதியில் அஜீத் பவாரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அனுமதியின்றி சுமார் 4 ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மூலம் அந்த மர்ம ட்ரோன்களை தரையிறக்கிய காவல் துறையினர் அவற்றை சிறைப்பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் சுமார் 2 லட்சம் மக்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது மறைவால் மகாராஷ்டிரத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.