அஜீத் பவாரின் மரணம் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: ரோகித் பவார்
அஜீத் பவாரின் மரணம் குறித்து ரோகித் பவார் கூறுவது..
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது தொடர்பான சூழ்நிலைகள் அனைவருக்கும் சந்தேகங்கள் இருப்பதாக என்சிபி (எஸ்பி) ரோஹித் பவார் தெரிவித்தார்.
பாராமுட்டியில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர், என்சிபி பிரிவுகள் ஒன்றுபட வேண்டும் என்று அஜீத் பவார் விரும்பியதாகவும், இணைப்புக்கான முயற்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
கடந்த மாதம் விமான விபத்தில் துணை முதல்வர் அஜீத் பவார் உயிரிழந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் 12 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 125 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல்கள் இன்று நடைபெற்றன.
Advertisement
Advertisement
ஜனவரி 28 அன்று விமான ஓடுதளத்தில் தரையிறங்கும்போது விமான விபத்துக்குள்ளானதில் அஜீத் பவார் உள்பட நால்வர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அனைவரின் மனதிலும் கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளன.
விபத்து ஏன் நடந்தது? அது எப்படி நடந்திருக்கும் என்பது போன்ற சந்தேகங்கள் குறித்து பிப்ரவரி 10-ஆம் தேதி மும்பையில் ஒரு விளக்கக்காட்சியாக வழங்கப் போகிறேன் என மறைந்த என்சிபி தலைவரின் மருமகனான ரோகித் பவார் கூறினார்.
அஜீத் பவாரின் அஸ்தி, இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் கரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
leader Rohit Pawar on Saturday said everyone has doubts about the circumstances surrounding Deputy Chief Minister Ajit Pawar's death in an air crash, and he would provide a detailed presentation about it on February 10.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.