மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு நாளை (ஜன. 29) அரசு மரியாதையுடன் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து பாராமதிக்கு, மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் சென்ற தனி விமானம் புதன்கிழமை காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த அஜீத் பவார் உள்பட 5 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில் அஜீத் பவாரின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு பாரமதியில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோர் பங்கேற்பதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அஜீத் பவாரின் மறைவுக்கு மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.