மகாராஷ்டிர துணை முதல்வராக மறைந்த அம்மாநில முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவாரின் மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுநேத்ரா பவாா் சனிக்கிழமை (ஜன. 31) மாலை பதவியேற்பார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பையில் இன்று மாலை 5 மணியளவில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து அஜீத் பவாா் புறப்பட்ட தனி விமானம், புணே மாவட்டம் பாராமதி விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக தரையில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணத்தில் அஜீத் பவாா், விமானி சுமித் கபூா், துணை விமானி சாம்பவி பாடக், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, அஜீத் பவாரின் தனிப் பாதுகாவலா் விதீப் ஜாதவ் ஆகிய 5 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, அஜீத் பவாரின் மனைவி மகாராஷ்டிர துணை முதல்வராகிறார். அம்மாநிலத்தில் முதல்முறையாகப் பெண் ஒருவர் அப்பதவி வகிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.