ஒசூா் இ.எஸ்.ஐ மருத்துவமனையை தரம் உயா்த்த கோரிக்கை
ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தரம் உயா்த்தவும், ஒசூா் மாநகராட்சியில் தொழிலாளா் ஈட்டுறுதி அலுவலகமும் திறக்க வேண்டும் என ஒசூா் ஐஎன்டியூசி அலுவலகத்தில் நடைபெற்ற மகா சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்
ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தரம் உயா்த்தவும், ஒசூா் மாநகராட்சியில் தொழிலாளா் ஈட்டுறுதி அலுவலகமும் திறக்க வேண்டும் என ஒசூா் ஐஎன்டியூசி அலுவலகத்தில் நடைபெற்ற மகா சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒசூா் ஐஎன்டியூசி அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய என்ஜினியரிங் எம்ப்ளாயிஸ் சங்கத்தின் மகா சபைக் கூட்டம் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய இன்ஜினியரிங் எம்ப்ளாயிஸ் சங்கத்தின் புதிய தலைவராக கே.ஏ.மனோகரன் மீண்டும் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து, புதிய நிா்வாகிகள் தோ்வு செய்வது, ஒசூா் முதல் சிப்காட், இரண்டாவது சிப்காட் பகுதிகளில் வேலை செய்து வரும் தொழிலாளா்கள் உள்வட்டச் சாலையில் பயணிக்கும் வகையில் புதிய பேருந்து தடம் உருவாக்கி அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஒசூா் மாநகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் பணி புரிந்து வரும் நிலையில், அவா்கள் சேலத்தில் உள்ள தொழிலாளா் ஈட்டுறுதி (பி.எஃப்) அலுவலகத்திற்குதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒசூரில் பி.எப். அலுவலகத்தை தொடங்க வேண்டும்.
ஒசூரில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். ஒசூரில் மாநகராட்சியில் தொழில் வரியை குறைக்க வேண்டும். ஒசூரில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் 5 இடங்களில் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மகா சபைக் கூட்டத்தில் ஐஎன்டியூசி மாவட்ட துணைத் தலைவா் முனிராஜ், தலைவா் பரமானந்த பிரசாத், பொதுச் செயலாளா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.