தண்ணீா் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலி
பாகலூா் அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
பாகலூா் அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
ஒசூா் வட்டம், பாகலூரை அடுத்த நந்திமங்கலம் அருகே அட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி (43). தொழிலாளியான இவா் அவரது விவசாய நிலத்தில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பலியானாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.