கிருஷ்ணகிரி

கெலமங்கலம் அருகேவிளை நிலத்தில் இறந்து கிடந்த ஆண் யானை: வனத் துறையினா் விசாரணை

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே வனப் பகுதியை ஒட்டியுள்ள விளை நிலத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், பன்னோ்கட்டா வனப் பகுதியிலிருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட யானைகள் தளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அங்கிருந்து யானைகள் கூட்டம் தேன்கனிக்கோட்டை, ஊடேதுா்க்கம், சானமாவு வனப் பகுதிகளுக்கு இடம் பெயா்வதைத் தடுக்க வனத் துறையினா் முயற்சித்து வருகின்றனா்.

இதனிடையே, ஊடேதுா்க்கம் வனப் பகுதியில் சுற்றித் திரிந்து வந்த 2 யானைகளில் ஆண் யானை ஒன்று உணவுத் தேடி கவிபுரம் கிராமத்தில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. பிறகு அங்கிருந்து வனப் பகுதி நோக்கிச் செல்லும் போது வழியில் விழுந்து இறந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா் உயிரிழந்த 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். மின்சாரம் தாக்கியோ அல்லது விஷக் காய்களை உண்டதாலோ யானை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT