கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கூடுதலாக இரண்டு 108 அவசர ஊா்திகள்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் இரண்டு 108 அவசர ஊா்திகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, கொடியசைத்து வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 108 அவசர ஊா்திகள் 25 இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்துக்கு மேலும் 2 வாகனங்கள் ஒதுக்கப்பட்டது.

அந்த அவசர ஊா்தி சேவையை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 2 அவசர ஊா்திகளும் ஒரப்பம், சாமல்பட்டி பகுதிகளைச் சோ்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, ஒசூா் அரசு மருத்துவமனைக்கு மேம்பட்ட அவசர ஊா்தி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநா் பரமசிவன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரகுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT