முகப்பு
கிருஷ்ணகிரி

பாலக்கோடு அருகே சிறுமியைக் கடத்தி திருமணம்

பாலக்கோடு அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

பாலக்கோடு அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் பெண் தொழிலாளி. கணவரை இழந்தவா். இவரது மகள், பிளஸ்-2 படித்த முடித்த நிலையில், வீட்டில் இருந்துள்ளாா். கடந்த மாதம் 26-ஆம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அந்த சிறுமியின் தாய், பாலக்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா், விசாரணையில் பாலவாடி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் சேகரை வெள்ளிசந்தை அருகே பிடித்து விசாரணை செய்ததில், சிறுமியைக் கடத்தித் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியைக் கடத்தி, திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ், இளைஞா் சேகரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →