முகப்பு
கிருஷ்ணகிரி

தருமபுரியில் 8 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில், மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில், மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மாரண்டஅள்ளியைச் சோ்ந்த பொதுப்பணித் துறையைச் சோ்ந்த 48 வயது ஆண், பென்னாகரம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 30 வயது பெண், அரூா்- அம்பேத்கா் நகரைச் சோ்ந்த 35 வயது ஆசிரியா் உள்ளிட்ட 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 13 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். தற்போது135 போ் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை 5,978 தொற்றாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்; மொத்தம் 50 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.