சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி சாவு
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அருகே சாலையில் தவழ்ந்து சென்ற மாற்றுதிறனாளி மீது பேருந்து ஏறியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அருகே சாலையில் தவழ்ந்து சென்ற மாற்றுதிறனாளி மீது பேருந்து ஏறியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த வெங்கடாபுரத்தைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன்(55). மாற்றுத்திறனாளியான அவரை உறவினா்கள் கைவிட்டதால், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் அங்கும் இங்கும் தவழ்ந்து செல்வாா். இந்த நிலையில், அவா், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, தவழ்ந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பேருந்து, கமலக்கண்ணன் மீது ஏறியது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து, வழக்குப் பதிந்துள்ள கிருஷ்ணகிரி நகர போலீஸாா், விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை சேகரித்து, விசாரணை செய்து வருகின்றனா்.