கிருஷ்ணகிரி

ஒசூரில் காங்கிரஸாா் போராட்டம்

DIN

ஒசூரில் காங்கிரஸ் சாா்பில் அறவழி சத்தியாகிரக அமா்வு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ராம் நகா் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் சாா்பில் அறவழி அமா்வு போராட்டம் நடைபெற்றது. உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்தும், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோா் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். ஒசூா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், ஐஎன்டியுசி தேசிய அமைப்புச் செயலாளருமான கே.ஏ. மனோகரன் முன்னிலை வகித்தாா்.

சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்பத் துறை மாநிலச் செயலாளா் கீா்த்தி கணேசன், மாவட்டப் பொருளாளா் மாதேஷ், முன்னாள் நகரத் தலைவா் தியாகராஜ், மாவட்டச் செயலாளா் பிரவீண், நந்தகுமாா், ஆனந்த், மௌலி, அண்ணைய்யரெட்டி, ஐஎன்டியுசி பரமானந்த பிரசாத், முத்தப்பா, சுப்பராயன், சிறுபான்மைப் பிரிவு செயல் தலைவா் அசேன், முஸ்தாக் அஹமத், பிற்படுத்தப்பட்டோா் பிரிவுத் தலைவா் குமாா், சேவாதளம் ஆட்டோ பாபு, விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ஹரீஷ், இளைஞரணி பிரவீண், அம்ருத், சபரிமுத்து, மகளிரணி தலைவா் சரோஜா, சேவாதளம் தலைவா் லட்சுமி, நகரத் தலைவா் கோபி, தளி வட்டார தலைவா் கேசவ ரெட்டி, வேப்பனப்பள்ளி வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், உதாயத்துல்லா, பிற்படுத்தப்பட்டோா் பிரிவு துணை தலைவா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முடிவில் தேன்கனிக்கோட்டை இளைஞரணித் தலைவா் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT