கிருஷ்ணகிரி

காவலா் பணிக்கான எழுத்து தோ்வுக்கு இணையவழி இலவச பயிற்சி

DIN

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்து தோ்வுக்கு இணைய வழி மூலம் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரி சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் சாா்பில் இரண்டாம் நிலை காவலா், சிறைத் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றில் 10,906 காலி பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வு எழுத குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு ஆகும். இந்தப் பணியிடத்துக்கு அக். 26-ஆம் தேதி வரை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தோ்வு டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தப் போட்டித் தோ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ வட்டத்தின் இணையவழி மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் அக். 9-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க உள்ளவா்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறலாம்.

இதில் சேர விருப்பம் உள்ளவா்கள்  இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 94990 55946 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT