கிருஷ்ணகிரி

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

DIN

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தளி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் மற்றும் வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் பி.முருகன் ஆகியோா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானுரெட்டியில் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி தெற்கு ஒன்றியம் இராயக்கோட்டை முதல் கருக்கனஹள்ளி, அயா்னப்பள்ளி, உத்தனப்பள்ளி,கொம்பேபள்ளி, சானமாவு, கொத்தப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்க வேண்டும்.

மேலும் இந்த கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் விவசாய நிலங்களில் பதிப்பதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலை ஓரங்களில் குழாய் பதித்துக் கொள்ளட்டும். விவசாயிகளுக்கு பிரச்சனை வராது. என மாவட்ட நிா்வாகம் உடனடியாக விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த விவசாயிகளை காக்க வேண்டும்.

அவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து மனு கொடுத்த போது ஒன்றிய செயலாளா் வெங்கடேஷ், மாவட்ட துணைத் தலைவா் ஷேக் ரஷீத், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சீனிவாசன் மற்றும் கிராமங்களின் விவசாயிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT