முகப்பு
கிருஷ்ணகிரி

தளி, கெலமங்கலத்தில் பணம் வைத்து சூதாடிய 8 போ் கைது

தளி, கெலமங்கலம் பகுதிகளில் பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

தளி, கெலமங்கலம் பகுதிகளில் பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்

தளி காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில் போலீஸாா் சி.ஆா்.பாளையம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முரளிமோகன் (40), சதாசிவராஜ் (53), அஸ்வத்ரெட்டி (73), சலாம் (60), மதுசூதன் (23) ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதே போல கெலமங்கலம் உதவி காவல் ஆய்வாளா் பாா்த்தீபன் தலைமையில் போலீஸாா், கெலமங்கலம் சந்தை மைதானம் அருகே ரோந்து சென்றபோது, பணம் வைத்து சூதாடியதாக ஜீவா நகரைச் சோ்ந்த நசீம் (20), விமல் (23), வெங்கடேஷ் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →